வியக்க வைக்கும் தமிழர் பண்பாடு ; நீர்வீழ்ச்சியில் சிவன் வழிபாடு

144479382 3029105040669912 4820386379189305839 n
144479382 3029105040669912 4820386379189305839 n

பாலி நாட்டில் தமிழரின் வழிபாட்டு முறைகள் தற்போதும் அம்மக்களால் பின்பற்றப்பட்டுவருவதாக கூறப்படுகின்றது.

பாலி நாட்டிலுள்ள பெஜி கிரிய நீர்வீழ்ச்சிக்கு(Beji Griya Waterfall) அருகே தமிழரின் தொண்மைக்கால வழிபாட்டுமுறைகளைப் பிரதிபலிக்கும் சிவலிங்கம், விநாயகர், நாகம் என்பன இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

சைவத் தமிழ் மக்களின் சிவ வழிபாடு உலகெங்கும் வியாபித்திருக்கின்றது என்பதற்கான ஆதாரமாக இது இருக்கின்றது.

தனித்துவம் மிக்கதாக மலைகளையும் கற்களையும் உயிரோட்டமாக செதுக்கிய சிற்பங்களையும் அமைதியான அழகான சூழலில் அழகிய குளிர்மையான நீர்வீழ்ச்சிக்கருகிலே இறைவனை மெய்யன்போடு வணங்குவதற்கான இடமாக உருவாக்கியிருப்பது உண்மையில் வியப்பினையே தோற்றுவிக்கின்றது.