நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று

SRILANKA
SRILANKA

நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

இன்றைய தினம் சுதந்திர தின நிகழ்வுகள் யாவும் சுதந்திர சதுக்கத்தில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுகாதார விதிமுறைகளுக்கமைய கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இன்றைய நிகழ்வில் பங்குபற்றும் அனைவருக்கும் பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று காலை 7.30 மணிக்கு சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.