காதலிக்காக மனைவியை கொன்ற கணவன்

625.0.560.350.160.300.053.800.668.160.90 1
625.0.560.350.160.300.053.800.668.160.90 1

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சமூக ஊடகங்களில் நாட்டம் காரணமாக புது மனைவியை கொன்ற கணவன் விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் கம்மம் மாவட்டத்தில் பெரபாலம் பகுதியிலேயே குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

திருமணம் முடித்து 2 மாதங்களில் புது மனைவியை கணவன் கொலை செய்த விவகாரத்தில் தற்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முதலில் தமது மனைவியை காணவில்லை என்றே அந்த கணவன் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து நடந்த விசாரணையில், கண்காணிப்பு கமெரா காட்சிகளை பரிசோதித்த காவல்த்துறையினர், அந்த கணவனின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அந்த கணவன், காவல்த்துறை விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

நாக ஷேஷு ரெட்டி என்பவருக்கும் எர்ரமல்ல கிராமத்தை சேர்ந்த நவ்யா என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

நவ்யா B.Tech இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று, தமது மனைவி கல்லூரியில் இருந்து திரும்பவில்லை என நாக ஷேஷு காவல்த்துறையினரை நாடியுள்ளார்.

காவல்த்துறையினர் முன்னெடுத்த விசாரணையில், கொட்டலங்கா கிராமத்தில் நாய் வளர்க்கும் இடம் ஒன்றில் நவ்யா தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசார், இறுதியில் ஷேஷு ரெட்டியை கைது செய்துள்ளனர்.

அதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். ஓராண்டாக 20 வயது இளம் பெண்ணுடன் தமக்கு தொடர்பு இருப்பதாகவும், குடும்பத்தார் நிர்பந்தம் காரணமாகவே திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமது காதல் விவகாரம் மனைவிக்கு தெரிய வரவே, அவர் காதலியை கைவிட கூறியதாகவும், ஆனால் காதலியை பிரிய முடியாததால் தமது காதலியுடன் இணைந்தே, புது மனைவியை கொல்ல திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்துகாவல்த்துறையினர் அந்த இளம் பெண்ணை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவரது மொபைலையும் காவல்த்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஆனால் காவல்த்துறை விசாரணைக்கு பயந்து அந்த இளம் பெண் சம்பவத்தன்றே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சமூக ஊடகங்களில் புது மனைவியின் அதிக நாட்டமே கொலைக்கு காரணம் என முதலில் கூறிய நாக ஷேஷு ரெட்டி, பின்னர் காவல்த்துறையினரிடம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.