பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வரர் என கூறி இந்திய பெண்ணை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பெற்ற நபர்

uk flag
uk flag

பிரித்தானியவை சேர்ந்த கோடீஸ்வரர் என கூறி இந்திய பெண்ணை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பெற்ற நபர் குறித்த அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

மும்பையை சேர்ந்த 33 வயதான பெண் திருமணத்துக்காக மாப்பிள்ளை தேடி வந்த நிலையில் மேட்ரிமோனியல் வலைதளம் மூலம் நபர் ஒருவர் அவருக்கு அறிமுகமானார்.

தான் பிரித்தானியாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிவதாக அப்பெண்ணிடம் கூறியிருக்கிறார்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இருவரும் நெருக்கமாக பேச தொடங்கினார்கள்.

இதையடுத்து அப்பெண்ணை மணந்து கொள்ள தனக்கு சம்மதம் என கூறிய அந்த நபர் சமீபத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக கூறியிருக்கிறார்.

பின்னர் இந்தியாவுக்கு வந்துவிட்டதாக அந்த பெண்ணுக்கு தொலைபேசிக்கு அழைத்து அவர் டெல்லி விமான நிலையத்தில் தன்னிடம் இருந்த அதிகளவிலான தங்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை அதிகாரிகள் வாங்கி கொண்டு தன்னை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாகவும் ரூ 16 லட்சம் அபராதம் கட்டினால் அனைத்து பொருட்களை கொடுத்துவிடுவார்கள் எனவும் கூறினார்.

தனது வருங்கால கோடீஸ்வர கணவர் தானே பணம் கேட்கிறார் என நினைத்த அப்பெண் அவருக்கு ரூ 16 லட்சத்தை வங்கி கணக்கின் மூலம் அனுப்பினார்.

இதன்பின்னர் அப்பெண் தொலைபேசிக்கு அழைத போது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.

இதை தொடர்ந்தே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் மோசடி நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.