பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

2ncrjufk narendra modi pti 625x300 17 May 19
2ncrjufk narendra modi pti 625x300 17 May 19

இராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) அர்ப்பணிக்கிறார். சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் அமைந்துள்ளது.

அத்துடன் நாகப்பட்டினத்தில் 35 ரூபாய் கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.

இதன் வாயிலாக சமூக பொருளாதார பயன்கள் அதிகரித்து தற்சார்பு நிலையை நோக்கி நாடு நடைபோட முடியும் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாக்களில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.