புதிய ஓய்வூதிய திட்டத்திற்கெதிராக பிரான்சில் போராட்டம்

france
france

பிரான்சில் அரசின் புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஓய்வூதிய வயது வரம்பு 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர, சேவைக்காலத்தை பொறுத்து ஓய்வூதியத்தின் தொகை மாறுபடும். ஓய்வூதியத்தை 64 வயதுக்கு முன்னதாக கோரினால் ஓவ்வூதிய தொகை வேறுபடும் என பல புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதை எதிர்த்து முதலில் சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொலிஸார், விமானநிலைய ஊழியர்கள் என அனைவரும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர்.

இதன் காரணமாக பிரான்ஸ் நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.