அமீரகத்தில் ஒரே நாளில் 4,298 பேர் குணமடைவு!

202005111013537942 From cinkampunariyai 21 had no coronary infection SECVPF
202005111013537942 From cinkampunariyai 21 had no coronary infection SECVPF

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 இலட்சத்து 63 ஆயிரத்து 357 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 158 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 68 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 4 ஆயிரத்து 298 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்து 56 ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 15 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,108 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 11 ஆயிரத்து 54 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

பொதுமக்கள் தொடர்ந்து முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.