ஜேர்மனியில் கொரோனா தொற்றினால் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF 1
202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF 1

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் மொத்தமாக 70ஆயிரத்து 3பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 24இலட்சத்து 26ஆயிரத்து 819பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 10ஆயிரத்து 782பேர் பாதிக்கப்பட்டதோடு 393பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 30ஆயிரத்து 316பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 37பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை 22இலட்சத்து 26ஆயிரத்து 500பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.