துருக்கியில் 27 இலட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு!

115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46
115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் துருக்கி தற்போது 9-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், துருக்கியில் தொற்று பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 27 இலட்சத்தைக் கடந்துள்ளது.

துருக்கியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,569 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 25.72 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.