வெடிகுண்டு மிரட்டலால் மூடப்பட்டது தாஜ்மஹால்

280px Taj Mahal in March 2004
280px Taj Mahal in March 2004

இந்தியாவின், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் வளாகத்திற்குள் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தின் பின்னர் வெடிக்கும் என்று உத்தரபிரதேச காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற அடையாளம் தெரியாத நபரின் தகவலின் பின்னர் தாஜ்மஹால் மூடப்பட்டதுன்,

அங்கிருந்த ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டது.

அதன்பின்னர் காவல்துறையினர் பாதுகாப்புக் குழுக்களுடன் சென்று தாஜ்மஹால் வளாகம் முழுவதும் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எனினும் அவ்வாறான எவ்வித வெடிபொருட்களும் இதன்போது மீட்கப்படாத நிலையில் தாஜ்மஹாலின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட்டு, மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து விடப்பட்டது.

இருப்பினும் போலியான வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான அழைப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.