கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் ஜேர்மனி

7083b90c 998a 4379 af03 b21c4a6330d7
7083b90c 998a 4379 af03 b21c4a6330d7

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜேர்மன் பெடரல் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை நெகிழ்த்த முன்வந்துள்ளது.

அதன்படி, திங்கள் முதல் சில கடைகளை மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

புத்தகக் கடைகள், பூக்கடைகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான பொருட்களை விற்கும் கடைகள், தினசரி தேவைகளுக்கான கடைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மற்றும் சுகாதார விதிகளுடன் திறக்கப்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

800 சதுர அடி கொண்ட கடைகளில், பத்து சதுர மீற்றருக்கு ஒரு வாடிக்கையாளர் மட்டுமே நிற்கலாம். பெரிய கடைகளில் கூடுதல் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படலாம்.

மார்ச் துவக்கம் முதல் ஜேர்மனியில் பள்ளிகளும் முடி திருத்தும் கடைகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசும் மாகாணங்களும் இந்த இரண்டாம் கட்டுப்பாடு நெகிழ்த்துதலுக்கு ஒப்புக்கொண்டுள்ளன.

அத்துடன், இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஐந்துபேர் வரை இனி வெளியிடங்களில் சந்தித்துக்கொள்ளலாம். பெரிய வர்த்தக அமைப்புகள், அருங்காட்சியகங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றை திறப்பது குறித்து, அந்தந்த மாகாணங்களில் உள்ள கொரோனா பரவல் நிலைமையைப் பொறுத்து முடிவு செய்துகொள்ளலாம் என பெடரல் அரசு அறிவித்துவிட்டது.