ஹரியும் மேகனுமே பிரித்தானிய ராஜ குடும்பம் இல்லை என்கிறார் லுக்சவேச்

625.0.560.350.160.300.053.800.668.160.90 copy
625.0.560.350.160.300.053.800.668.160.90 copy

ஹரியும் மேகனுமே பிரித்தானிய ராஜ குடும்பம் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்… அப்புறம் நமக்கு மட்டும் அவர்கள் எதற்கு? என கேள்வி எழுப்பியுள்ளார் கனேடிய பத்திரிகையாளர் ஒருவர்.

ரொரன்றோவை மையமாகக் கொண்ட லுக்சவேச் என்ற அந்த பத்திரிகையாளர், யெகோவின் மெகசீன் என்ற பத்திரிகையில் பணி புரிகிறார்.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்துள்ள பேட்டியைப் பார்வையிட்டபின், ராஜகுடும்பம் குறித்த தனது கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

கனடா நாட்டின் தலைவர் யார் என கனேடியர்களிடம் கேள்வி எழுப்பியபோது, 75 சதவிகிதம் பேருக்கு அந்த கேள்விக்கான பதில் தெரியவில்லை.

அந்த கேள்விக்கான பதில், பிரித்தானிய மகாராணியார்! இன்றும் கனடாவில் ஒருவர் குடியுரிமை பெறவேண்டுமானால், அவர் பிரித்தானிய மகாராணியார் பெயரில்தான் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும்.

கனடாவின் தலைவராக பிரித்தானிய மகாராணியார் இருப்பதைக் குறித்து கனேடியர்களின் எண்ணங்கள் எப்போதுமே நிலையாக இருந்ததில்லை.

இதற்கிடையில், ஹரி மேகன் பேட்டி வெளியாவதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 45 சதவிகிதம் பேர், மகாராணியாருக்கு பதிலாக, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்தான் கனடாவின் தலைவராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர்களாக இருந்த ஹரியும் மேகனுமே தங்களுக்கு ராணியாரின் தலைமை வேண்டாம் என முடிவு செய்துவிட்ட நிலையில், கனடா எதற்காக காத்திருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார் லுக்சவேச்