சிங்கப்பூரில் தமிழர் மரபு புத்தகம் வெளியீடு

singapore
singapore

2,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நாகரீகம் தழைத்தோங்கியதாக சில ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குமரிக் கண்டம் என்ற கண்டம் இருந்ததாகவும் நில அதிர்வுகள், கண்ட நகர்வுகள் போன்ற புவியியல் காரணங்கள் காரணமாக அக்கண்டம் அழிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு நாடுகளில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சமூகம் வாழ்ந்து வருகிறது என சிங்கப்பூர் மந்திரியினால் வெளியிடப்பட்டுள்ள தமிழர் மரபு எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

‘தற்காலிகம் முதல் நிரந்தர குடியேறிகள் வரை – சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய தமிழர்கள்’ என்ற தலைப்பிலான புத்தகத்தை சிங்கப்பூர் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு மந்திரி ஈஸ்வரன் கடந்த சனிக்கிழமை வெளியிட்டு வைத்தார்.

இது தென்கிழக்கு ஆசியா மற்றும் சிங்கப்பூரில் தமிழ் வரலாறு மற்றும் தமிழர் பாரம்பரியம் குறித்து குறைவாக அறியப்பட்ட அம்சங்களை பற்றியும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியுடன் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை பற்றியும் விளக்குகிறது.

சிங்கப்பூரின் அடையாளத்தை வடிவமைப்பதில் ஆரம்பகால தமிழ் முன்னோடிகளின் முயற்சிகள் மிக முக்கியமானவை என ஈஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.