லண்டனில் புலம்பெயர் தமிழர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல்

625.0.560.350.390.830.053.800.670.160
625.0.560.350.390.830.053.800.670.160

இலண்டன் – கெண்டனில் (Kenton) புலம்பெயர் தமிழர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை பதிவாகியுள்ளது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தி அம்பிகை செல்வகுமார் என்பவர் 16 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் அவரது இல்லத்துக்கு வெளியில் நேற்று ஒன்று கூடியிருந்தனர்.

இதன்போது காவல்துறையினர் அங்கு சென்று ஒருவரை கைது செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது என்றும் இதன் போது ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில் இதன்போது ஒருவர் தாக்கப்பட்டதாகவும் பிரித்தானியாவிலிருந்து செயல்படும் தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியை ஏந்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.