ஜேர்மனியில் ஊரடங்கை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்

download 7 4
download 7 4

கொரோனா தொற்றுநோயின் ஆபத்தான மூன்றாவது அலைகளைத் தவிக்க வேண்டுமென்றால் உடனடியாக ஜேர்மனியில் ஊரடங்கு அறிமுகப்படுத்த வேண்டும் என தீவிர சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதுள்ள தரவுகளிலிருந்தும், பிரித்தானியாவில் தோன்றிய உருமாறிய கொரோனா பரவுவதாலும், ஆபத்தான மூன்றாவது அலைகளைத் தவிர்ப்பதற்காக உடனடியாக ஊரடங்கு அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம் என்று ஜேர்மனியின் தீவிர சிகிச்சை பதிவேட்டின் இயக்குனர் கிறிஸ்றியன் கறகியநிடிஸ் கூறினார்.

அடுத்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை தளத்தியே வைத்திருப்பதன் மூலம் நமக்கு பெரிய லாபம் கிடைக்கப் போவதில்லை.

ஏனென்றால் இந்த காலத்திற்குள் தொற்று பரவல் விரைவாக உச்சத்தை எட்டும் மற்றும் அதை மீண்டும் குறைப்பதற்கு இரு மடங்கு கடினமாக்கும் என்று ஜேர்மனியின் தீவிர சிகிச்சை பதிவேட்டின் இயக்குனர் கிறிஸ்றியன் கறகியநிடிஸ் எச்சரித்துள்ளார்.