அமெரிக்காவில் 12.14 கோடி பேருக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி!

f76b585b 1a770627 covid 19 vaccine 850x460 acf cropped
f76b585b 1a770627 covid 19 vaccine 850x460 acf cropped

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. தற்போது ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் ஜோ பைடன் அரசு கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா மற்றும் பைசர்/பையோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 12,14,41,497 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 19 ஆம் திகதி வெளியான தகவலின்படி மொத்தம் 11,83,13,818 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நாட்டின் அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு அதிக அலவிலான மக்களுக்கு மருத்தை கொண்டு சேர்க்க முயன்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.