அமெரிக்காவில் நிறவெறியை முன்வைத்த ஆசிரியை பணி நீக்கம்!

f278d6e5 1602783472347
f278d6e5 1602783472347

அமெரிக்காவில் பாட நேரத்துக்குப் பிறகும் ஸும் காணொளி அழைப்பைத் துண்டிக்கத் தவறிய ஆசிரியை தனது மாணவரின் குடும்பத்தினர் குறித்து நிறவெறி ரீதியில் பேசியமை தொடர்பான சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கலிபோர்னியா மாகாணத்தில் பாட நேரத்திற்குப் பிறகு மாணவர் உடனான ஸும் அழைப்பை ஆசிரியை ஒருவர் துண்டிக்க தவறியுள்ளார்.

அத்துடன், அந்த மாணவரின் குடும்பத்தைப் பற்றி நிறவெறி ரீதியாக விமர்சித்தும் உள்ளார். அதனை, சம்பந்தப்பட்ட மாணவரின் குடும்பத்தினர் பதிவு செய்து, அது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இதில், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை, ஸூம் அழைப்பில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக 12 வயது கறுப்பின மாணவர் ஒருவரையும் அவரது குடும்பத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பாடசாலை நிர்வாகத்திடம் மாணவரின் பெற்றோர் அளித்த முறைப்பாடை தொடர்ந்து, அவர் மீது விசாரணைகள் முடியும் வரை அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அந்த ஆசிரியரின் நிறவெறி ரீதியிலான விமர்சனத் தாக்குதல் குறித்து சட்ட ரீதியாவும் போராடவுள்ளதாக மாணவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.