தன்சானிய ஜனாதிபதியின் இறுதி சடங்கில் ஏற்பட்ட நெரிசலில் 45 பேர் பலி!

1617182304 3042547 hirunews
1617182304 3042547 hirunews

தன்சானியா நாட்டு ஜனாதிபதி ஜோன் மெகுபுலி கடந்த 17 ஆம் திகதி காலமானார்.

தன்சானிய மக்களின் ஆதரவை பெற்ற இவரின் மரணம், மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் அவரின் பூதவுடல் ஹிக்ரு மைதானத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

ஜோன் மெகுபுலியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் வருகைத் தந்திருந்தனர்.

சிலர் அந்த மைதானத்தின் சுவர் ஏறி குதித்து அங்கு சென்ற போது திடீரென அந்த சுவர் இடிந்து கீழே விழுந்துள்ளது.

இதன்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் உயிரிழந்துள்ளதாக தன்சானியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மறைந்த ஜனாதிபதியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பொதுமக்கள் 45 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொரோனா தொற்றினாலேயே உயிரிழந்தார் என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.