குடியுரிமை திருத்த மசோதாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் எதிர்ப்பு

imran khan
imran khan

இந்திய நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பதிவினூடாக தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையின்கீழ் இந்தியா, இந்து மேலாதிக்க செயல்திட்டத்துடன் முறையாக நகர்ந்து கொண்டிருக்கிறது”
என்றும்

“இந்த செயல் திட்டமானது, பாகிஸ்தான் மீதான அணு ஆயுத மிரட்டல்களுடன் சேர்ந்து, மிகப்பெரிய இரத்த களரிக்கு வழிநடத்தும். உலகுக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். காலம் கடந்து செல்வதற்கு முன் உலகம் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.