அமீரகத்தில் ஒரே நாளில் 2,210 பேர் குணமடைவு!

vikatan 2020 07 d3a14203 c091 4c01 9aef 5310fb812abb fusion medical animation rnr8D3FNUNY unsplash
vikatan 2020 07 d3a14203 c091 4c01 9aef 5310fb812abb fusion medical animation rnr8D3FNUNY unsplash

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 இலட்சத்து 52 ஆயிரத்து 243 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 84 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 68 ஆயிரத்து 23 ஆக உயர்ந்தது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 210 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 இலட்சத்து 52 ஆயிரத்து 321 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 2 பேர் பலியானார்கள். இதனால் தற்போது கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,504 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 14 ஆயிரத்து 198 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இருப்பினும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.