சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

usa
usa

இந்திய அரசு தனது நாட்டில் உள்ள மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவகாரங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான சட்டத்தின் கீழ் அனைவரையும் சமமாக பாவித்தல் எங்கள் இரு ஜனநாயக நாடுகளின் அடிப்படைக் கொள்கைகளாகும்.

இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப தனது நாட்டின் மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா இந்தியாவை வலியுறுத்துவதாக’ தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதா குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.