இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 126,315 பேருக்கு கொரோனா!

visual v9
visual v9

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 126,315 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த காலப்பகுதியில் 684 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மாத்திரம் நேற்றைய தினம் 4,000 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன், 17 பேர் இந்த தொற்றினால் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதன்படி, இந்தியாவில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 129,26,061 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் அங்கு கொவிட் 19 தொற்றால் 166,892 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.