ஜோர்தான் அரச குடும்பத்திற்குள் குழப்பம்

g1
g1

அதிகார பலத்தால் மறைக்கப்படும் குடும்பப் பகையின் அராஜகங்கள்
பொருத்த மற்ற முடியாட்சிகளால் அவதிப்படும் குடிகளின் அவலங்கள்
இன்னொரு அரச குடும்பம். அதற்குள் நிகழ்ந்த அதிகாரப் போட்டியின் கசப்பான பக்கம் அம்பலமாகி இருக்கிறது.உலகில் எங்கெல்லாம்அரச குடும்பங்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் ஏதோவொரு பிரச்சினை. ஜோர்தானிய அரச குடும்பம் விதிவிலக்காக இருந்தது.

அதிலும் பிரச்சினைதான் என்பதை இரு சகோதரர்களுக்கு இடையிலான முறுகல் நிலை வெளிப்படுத்தியுள்ளது. நபி பெருமானாரை உலகிற்கு ஈந்த ஹஷீமிகளின் பரம்பரையில் வந்து, நூறு வருடங்களாக ஜோர்தானை ஆளும் குடும்பம்.

அதில் ஜோர்தானை நீண்டகாலம் (1935-1999) ஆட்சி செய்து புகழ் பெற்றவர், மன்னர் முதலாம் ஹுசைன். அவருக்கு நான்கு மனைவியர். விவாகரத்துப் பெற்ற இரண்டாம் மனைவியின் மகன் இரண்டாவது அப்துல்லா. இவர் ஜோர்தானின் சமகால மன்னர் வயது 59. நான்காவது மனைவியின் பிள்ளைகளுள் ஒருவர் இளவரசர் ஹம்சா. இவருக்கு 40 வயது. மன்னர் 2ஆவது அப்துல்லாவின்அரசாங்கம், இளவரசர் ஹம்சா மீது குற்றம் சுமத்துகிறது. அது தேசத்துரோக குற்றச்சாட்டு.

ஒரு வெளிநாட்டு சக்தியின் துணையுடன் ஜோர்தானை சீர்குலைக்க இளவரசர் முனைந்தார் என்ற குற்றச்சாட்டு அவ்வளவு எளிதானதுஅல்ல.

கடந்த சனிக்கிழமை இளவரசர் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்படுகிறார்கள்.

வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்படும் இளவரசர் ஹம்சா காணொளியை வெளியிடுகிறார். சதி முயற்சிக் குற்றச்சாட்டை மறுக்கிறார். மன்னர் அப்துல்லாவின் ஆட்சியை கடுமையாக விமர்சிக்கிறார்.

மன்னரின் அராஜகங்களை விமர்சிக்க முடியாது, விமர்சித்தால் தமக்கு ஏற்பட்ட கதியே நடக்கும் என்கிறார்.