இந்திய பிரஜைகள் தமது நாட்டுக்குள் உள்வருவதற்கு ஈரான் தடை

download 1 26
download 1 26

கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக இந்திய விமான சேவைகளுக்கு குவைட் அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

இதன்படி இன்று முதல் மறுஅறிவித்தல் வரை இந்தியவிமான சேவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், வர்த்தக விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குவைட் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்திய பிரஜைகள் தமது நாட்டுக்குள் உள்வருவதற்கு ஈரான் தடை விதித்துள்ளது.

இன்று முதல் குறித்த திட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று மிகவும் அபாயகரமானது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் சுமார் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பயணிகள் சுகாதார வழிகாட்டல்களை வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என ரயில்வே திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.