ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் உலக அழகியாக தெரிவு

miss world
miss world

69வது உலக அழகி போட்டியில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்ற நிலையில் பல்வேறு போட்டிகளன் மத்தியில் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டு 10 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இறுதிச்சுற்றில் அழகிகளின் அறிவுத்திறனை சோதிப்பதற்கான கேள்விகள் கேட்கப்பட்டன.

இதன் முடிவில் உலக அழகியாக ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் தேர்தெடுக்கப்பட்டார்.

23 வயதான டோனி ஆன் சிங் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் பெண்கள் நலன் மற்றும் மனநலம் தொடர்பான பட்டப்படிப்பினை மேற்கொண்டு வருகிறார்.