துருக்கியில் மக்கள் மீதான தாக்குதல் திட்டம் கண்டுபிடிப்பு!

thumbs b c 400cd327dae2e6a97694f47bf660413c
thumbs b c 400cd327dae2e6a97694f47bf660413c

இஸ்தான்புல்லின் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு வாகனத்தின் கீழிருந்து ஒரு தொகை வெடிபொருட்களை துருக்கி காவல்துறையினர் கண்டுபிடித்து செயலிழக்கம் செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்தார்.

“இன்று இஸ்தான்புல் காவல்துறையினர் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலைத் தோல்வியுறச் செய்தனர். எங்கள் காவல்துறையினரின் விழிப்புணர்வின் விளைவாக, ஒரு காரில் பொருத்தப்பட்ட 5 கிலோகிராம் வெடிபொருட்கள் இஸ்தான்புல் பேருந்து நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வெடிபொருட்களை பொருத்திய குற்றச்சாட்டில் இரு பயங்கரவாதிகளையும் காவல்துறையினர் கைதுசெய்ததாகவும்” என்.டி.வி ஒளிபரப்பாளரிடம் சோய்லு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் துருக்கியில் தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே.) உறுப்பினர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

துருக்கியில் 1980 களின் முற்பகுதியில் இருந்து துருக்கியில் குர்திஷ் சுயாட்சியை நிறுவ முற்படும் பி.கே.கே-க்கு எதிராக துருக்கி அரசாங்கம் போராடி வருகிறது.

பி.கே.கே மற்றும் அங்காரா 2013 இல் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, ஆனால் பி.கே.கே தீவிரவாதிகள் செய்ததாகக் கூறப்படும் பல பயங்கரவாத தாக்குதல்களால் பேர் நிறுத்த ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தோல்வியடைந்தது.