பெங்களூரில் 3 ஆயிரம் கொரோனா தொற்றாளர்களை காணவில்லை

download 1 31
download 1 31

இந்தியாவில் பெங்களூரில் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில், 3000 கொரோனா தொற்றாளர்கள் காணமால் போயுள்ளனர்.

இவ்வாறு காணமால்போனவர்கள் தங்கள் தொலைபேசி இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். அவர்களை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், காணாமல் போனவர்களால் வைரஸ் பரப்புவதற்கு சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாத்திரம் கர்நாடகாவில் 39,047 தொற்றாளர்களும், 229 மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்நிலையில், பெங்களூர் நகரில் 22,596 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஒரு வருடகாலமாக கொரோனா நோயாளிகள் காணாமல் போவது தொடர்பான பிரச்சினை இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மக்களுக்கு இலவச மருந்துகளை வழங்குகிறோம், இதன் மூலம் 90 சதவீத தொற்றாளர்களை கட்டுப்படுத்த முடியும், ஆனால் அவர்கள் (கொரோனா நோயாளிகள்) தங்கள் தொலைபேசி இயக்கதை நிறுத்தி வைத்துவிட்டார்கள்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கள் தொலைபேசி இயக்கதை நிறுத்தி வைத்துவிட்டார்கள், அவர்கள் இருக்கும் இடத்தைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்தவில்லை, இது பாரிய பிரச்சினையாகும்.

பெங்களூரில் குறைந்தது 2,000 முதல் 3,000 பேர் தங்கள் தொலைபேசி இயக்கதை நிறுத்தி வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாக நான் உணர்கிறேன். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசிகளை இயங்க வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், அவற்றைக் கண்காணிக்க காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.