கடும் போராட்டத்திற்குப் பின் தோல்வியைத் தழுவினார் கமல் ஹாசன்!

Tamil News large 2689294
Tamil News large 2689294

தமிழக சட்டமன்ற தேர்தலில் கடும் இழுபறிக்குப்பின்கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானிதி சீனிவாசன் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கோவை மாவட்டம் கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வானதி சீனிவாசனுக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. முதல் ஒன்றிரண்டு சுற்றுகளில் கமல் பின்தங்கியிருந்தார்.

அதன்பின் தொடர்ந்து முன்னிலை பெற்றார். என்றாலும் வாக்குகள் வித்தியாசம் மிகக் குறைவாகவே இருந்தது. இறுதியில் வானதி சீனிவாசன் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கமல் ஹாசன் கடும் போராட்டத்திற்குப் பின் தோல்வியைத் தழுவினார்.