மோடி தலைமையிலான அரசாங்கம் மீது குற்றச்சாட்டு!

Modi Speech
Modi Speech

இந்தியாவின் தற்போதைய நிலைக்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என பிரித்தானியாவின் லென்செட் மருத்துவ இதழில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலின் முதலாம் அலையை கட்டுப்படுத்த இந்தியா சிறப்பாக செயற்பட்ட போதும், நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் நடவடிக்கையால் தற்போது அந்த நிலைமை சீர்குழைந்துள்ளதாக குறித்த இதழின் புதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கொவிட்-19 பரவல் தொடர்பில் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியின் செயற்பாடுகளை மன்னிக்க முடியாது. 

அதேநேரம் இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 409,300 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் 4, 133 மரணங்களும் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி இந்தியாவில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 22,295,000 ஐ கடந்துள்ளது.

பதிவாகியுள்ள கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கையும் 242,398 ஆக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல் இருக்க இந்திய அரசாங்கம் விசேட நடைறைகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.