ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,116 பேருக்கு கொரோனா!

vikatan 2020 07 d3a14203 c091 4c01 9aef 5310fb812abb fusion medical animation rnr8D3FNUNY unsplash 1
vikatan 2020 07 d3a14203 c091 4c01 9aef 5310fb812abb fusion medical animation rnr8D3FNUNY unsplash 1

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,96,842 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 329 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 13 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றில் இருந்து 45 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2.72 இலட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.