ஒரு நாளில் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு நபருக்கு மாத்திரமே அனுமதி!

09d7a050 9af048fb asela gunawardena 850x460 acf cropped
09d7a050 9af048fb asela gunawardena 850x460 acf cropped

இன்று தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் அமுலுக்குவரும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை வெளியிடுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைவாக நாளை (13) முதல் ஒரு நாளில் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு நபருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாக (1, 3, 5, 7, 9) இருப்பின் அன்றைய நாளின் திகதியின் இலக்கம் ஒற்றை இலக்கமாகவும், அது இரட்டை இலக்கமாக (0, 2, 4, 6, 8) இருப்பின், இரட்டை இலக்கமுடைய திகதியிலும் வீட்டை விட்டு செல்ல முடியும்.

இதேவேளை கடமைகளுக்கும் சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த நடைமுறை ஏற்புடையாகாது என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயண கட்டுப்பாடு இல்லாத வேளையில் இந்த தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை கையாள வேண்டியதில்லை.

திருமண வைபவங்களுக்கு மறு அறிவித்தல் வரை அனுமதி இல்லை அத்தோடு திருமண பதிவு நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சாட்சியாளர்கள் அடங்களாக 15 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.