பிரெக்ஸிற் ஒப்பந்தம் -தொழிற்கட்சி வாக்களிக்காது

3 rers
3 rers

வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரெக்ஸிற் ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டால் அதற்கு தொழிற்கட்சி வாக்களிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பரி கார்டினர்  கூறியுள்ளார்.

ஏனெனில் அதன் சில உட்பிரிவுகளை அகற்ற அரசாங்கம் முன்வந்தால் மாத்திரமே தாம் வாக்களிக்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொரிஸ் ஜோன்சனின் மீளப்பெறுதல் ஒப்பந்தம் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலின் உட்பிரிவுகளை நீக்குகிறது என்றும் அதே உட்பிரிவுகளைக் கொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் எடுத்து வருவதால் ஒரு கட்சியாக எங்களுக்கு முன்னரை விடவும் குறைவாக ஈர்க்கக்கூடிய அம்சமே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாம் இந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தோம் என்றும் பரி கார்டினர் கூறினார்.

ரொம் வற்சனுக்கு பதிலாக கட்சியின் துணைத் தலைவராக பரி கார்டினர் நியமிக்கப்படவுள்ளதாக வரும் தகவல்கள் குறித்துக் கேட்டபோது அவை ஊகங்கள் மட்டுமே என்று அவர் தெரிவித்தார்.