இஸ்ரேல் – பலஸ்தீன் தாக்குதல்! காசா பகுதியில் 227 பேர் உயிரிழப்பு!

.jpg
.jpg

இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதிகளில் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

நேற்று வரையில் காசா பகுதியில் 227 பேர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மரணித்தவர்களில் 64 சிறுவர்களும் 38 பெண்களும் அடங்குவதாக காசாவிலுள்ள சுகாதார தரப்பு அறிவித்துள்ளது.

வன்முறை அதிகரித்துள்ள நிலையில் 10 ஆவது நாளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த விடயம் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்துரையாடியுள்ளார்.

போர் நிறுத்தத்திற்கான பாதை குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த கலந்துரையாடலினை தொடர்ந்து கருத்துரைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நோக்கம் நிறைவேறும் வரையில் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் லெபனான் பகுதியிலிருந்து 4 ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதற்கு பதிலளித்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.