இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 276,110 பேருக்கு கொரோனா!

114634247 gettyimages 1207092841
114634247 gettyimages 1207092841

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 276,110 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அந்த வகையில் இந்தியாவில் இதுவரை கொவிட-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 25,772,440 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இந்த காலப்பகுதியில் 3,874 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய கொவிட் தொற்றினால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 287,122 ஆக உயர்வடைந்துள்ளது.