அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 54516 ஆக உயர்வு!

156735 corono 4
156735 corono 4

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 இலட்சத்து 24 ஆயிரத்து 887 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,596 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 54 ஆயிரத்து 516 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 1,571 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்து 34 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,648 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 18 ஆயிரத்து 387 பேர் பல்வேறு மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.