இந்தியாவில் மின்னல் தாக்கி 20 பேர் பலி!

lightningbolts
lightningbolts

இந்தியாவின் மேற்கு வங்கம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 20 பேர் நேற்று (07) பலியாகினர்.

அந்நாட்டு இடர் முகாமைத்துவ மையம் இதனை அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த அனர்த்தத்தில் காயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த 20 பேருக்கும் இந்திய பிரதமர் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மரணித்தவர்களின் உறவினர்களுக்கு தலா 2 லட்சம் ரூபா வழங்கப்படவுள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.