இந்தியாவில் பேருந்து – முச்சக்கர வண்டி மோதி விபத்து! 17 பேர் பலி!

2013 03 06 12.19.55
2013 03 06 12.19.55

உத்தர பிரதேசத்தில் பேருந்தொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

கான்பூர் நகரில் உள்ள சச்சேண்டி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றும், எதிரில்வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 17 பேர் பலியாகியதுடன், மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.