மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் சீனா ஈடுபடுகிறது-மனித உரிமைகள் சபை

china
china

உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஜின்ஜியாங் மாகாணத்தில் சீனா மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமைகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவின் வடக்கு பகுதியில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பிராந்தியத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

சீனா, இந்த உய்குர் முஸ்லிம் இனத்தை அழிப்பதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

உய்குர் முஸ்லிம் மக்களை தீவிரமாகக் கண்காணிப்பது, சித்ரவதை செய்வது, காரணமின்றி முகாம்களில் அடைப்பது போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களில் சீனா ஈடுபடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுக்கிறது.