ட்ரம்புக்கு எதிராக குற்றவியல் பிரேரணை நிறைவேற்றம்

download 1 6
download 1 6

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கும் தீர்மானம் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ள நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இத்தேர்தலில் டொனால் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் தன் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக எதிர்க் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதித் திட்டம் தீட்டுவதாகவும், உக்ரைன் ஜனாதிபதியிடம் பிடனுக்கு எதிராக சதி செய்ய பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை முடிந்துள்ள நிலையில், ட்ரம்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக  அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் 66 செனட் உறுப்பினர்களின் பலம் தேவை. இதனால் அங்கு ட்ரம்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேறுவது சந்தேகம் எனவும் ட்ரம்பின் ஜனாதிபதிப் பதவிக்கு உடனடியாக சிக்கல் இல்லை எனவும் கூறப்பட்டது.