இந்த ஆண்டில் வட கொரியாவின் பொருளாதாரம் வளர்ச்ச்சியடைந்துள்ளது – கிம் ஜொங் உன்

download 14 1
download 14 1

வட கொரியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு வளர்ச்சியடைந்துள்ளதாக அதன் தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட சூறாவளி காரணமாக, உணவுக்காக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடகொரிய அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி, வெளிநாட்டு ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கிம் ஜொங் உன் தலைமையில், நேற்று (15) இடம்பெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில், முக்கிய கொள்கைகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் தொடர்பான தகவல்களை வடகொரியா இதுவரையில் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

எவ்வாறிருப்பினும், எல்லை மூடல், உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட, வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொண்டுள்ளது.

கொவெக்ஸ் திட்டத்தின்கீழ், சுமார் 2 மில்லியன் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீடித்த ஆலோசனைகளுக்கு மத்தியில், அந்தப் பணிகள் தாமதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.