மு.க ஸ்டாலின் மோடியை சந்தித்து 25 அம்ச கோரிக்கை முன்வைப்பு

image poli 176
image poli 176

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இதன்போது நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகு ஒரு மாதம் கழித்து தமிழக முதல்வரான மு க ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை டெல்லி சென்று சந்தித்தார்.

இதற்காக இன்று காலை அவர் சிறப்பு விமானத்தில் சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார்.

புதுடில்லி சென்றடைந்த அவரை தி.மு.கவின் மக்களவை உறுப்பினர்களான டி ஆர் பாலு மற்றும் திருமதி கனிமொழி தி.மு.கவின் நாடாளுமன்ற பிரதிநிதியான ஏ கே எஸ் விஜயன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். பிறகு மாலை மாலையில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

அதன்போது நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இரத்து செய்ய வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை அவர் பிரதமரிடத்தில் வலியுறுத்தினார். இவர்களது சந்திப்பு 25 நிமிடங்கள் நீடித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்றும் நாளையும் டெல்லியில் தங்கி உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.