உன்னாவ் பெண் கற்பழிப்பு- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

unnav rape case
unnav rape case

உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் முன்னாள் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் இந்த வழக்கில் ரூ.25 லட்சத்தை குல்தீப் செங்கார் அபராதமாக செலுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இந்த தொகையை ஒரு மாதத்திற்குள் குல்தீப் சிங் செங்கார் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரும், சகோதரியும் கூறியதாவது:-

குல்தீப் சிங் செங்காருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் முழுமையான நீதியைப் பெற முடியும். அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து அளித்த தீர்ப்பில் எங்களுக்கு திருப்தி இல்லை. அவர் என்றோ ஒரு நாள் வெளியே வந்தால் எங்களை கொன்று விடுவார் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளர்.

பின்னணி;
உத்தரப்பிரதேசம், உன்னாவ் பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா் கடந்த 2017ஆம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது பாலியல் புகார் அளித்தார்.

அந்த புகார் தொடர்பாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததைத் தொடர்ந்து அந்த பெண், முதல்வர் யோகி ஆதித்தியநாத் இல்லம் முன்பாக தீக்குளிக்க முயன்றார்.

இதன் மூலம் இந்த விவகாரம் ஊடகங்களின் கவனத்தை பெற்றது. உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து குல்தீப் சிங் செங்காரை பாஜக கட்சியில் இருந்து நீக்கியது.

உன்னாவ் பெண் தொடர்ந்த வழக்கில் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.