தேசிய கீதம் பாடப்பட்டு போராட்டகாரர்கள் கலைப்பு

india 1
india 1

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய கும்பலை தேசிய கீதத்தை பாட வைத்து அவர்களை கலைய வைத்துள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 144 தடை உத்தரவை மீறி பெங்களூரில் மாணவர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் பெங்களூர் மத்திய மண்டல துணை ஆணையாளர் சேத்தன்சிங் ரத்தோர் ஒலி பெருக்கியில் பேசினார்.

இந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையின் அவசியம் குறித்து உருக்கமாக பேசிய அவர் நீங்கள் என்னை மதித்தால் நான் பாடும் பாடலை என்னோடு சேர்ந்து பாடுங்கள் என்று கூறினார்.அதன் பிறகு தேசிய கீதத்தை அவர் பாடினார்.

போராட்டக்காரர்கள் அனைவரும் கோ‌ஷமிடுவதை கைவிட்டு தேசிய கீதத்தை அவருடன் சேர்ந்து பாடினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.