பிரேஸிலில் 500,868 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு!

1624159470 116049 hirunews
1624159470 116049 hirunews

பிரேஸிலில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பிரேஸிலில் 2,247 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, பிரேஸிலில் மரணித்தோரின் எண்ணிக்கை, 500,868 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி சர்வதேச ரீதியில் 5 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவான இரண்டாவது நாடாக பிரேஸில் பதிவாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் 617,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.