எத்தியோப்பியாவில் போர் நிறுத்தம் அறிவிப்பு

thumb Ethiopian
thumb Ethiopian

எத்தியோப்பியாவின் அரசாங்கம் அதன் வடக்கு டைக்ரே பிராந்தியத்தில் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

டைக்ரே பிராந்தியத்தின் முன்னாள் ஆட்சியாளர்கள் திங்களன்று பிராந்திய தலைநகரான மெக்கெல்லின் கட்டுப்பாட்டை கிட்டத்தட்ட எட்டு மாத கால சண்டையின் பின்னர் திரும்பப் பெற்றதாகக் கூறியதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நவம்பர் மாதத்தில் அரசாங்கப் படையினரால் விரட்டப்பட்ட பின்னர் முதல் முறையாக நகரத்தில் கிளர்ச்சிப் படையினரைப் பார்த்ததாக மெக்கல்லேயில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

பிராந்தியத்தின் முன்னாள் ஆளும் கட்சியான டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் செய்தித் தொடர்பாளர் திங்களன்று, டைக்ரேயின் தலைநகரான மெக்கெல்லே எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறினார்.

ஆயிரக்கணக்கான மக்களைக் உயிரிழப்புகள், 2 மில்லியனுக்கும் அதிகமானோரின் இடம்பெயர்வுகள், நூறாயிரக்கணக்கானவர்களை பஞ்சத்தின் விளிம்பிற்குத் தள்ளிய ஒரு மோதலில் இந்த முன்னேற்றங்கள் வியத்தகு திருப்பத்தைக் ஏற்படுத்தியுள்ளது.