இந்தோனேசியாவில் பிராணவாயு தட்டுப்பாட்டால் 63 பேர் பலி

corona death 3
corona death 3

இந்தோனேசியாவில், கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ளமையால், மருத்துவ தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு, பிராணவாயு உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் தற்போது நாளாந்தம் சுமார் 25,000 நோயாளர்கள் பதிவாகின்றனர்.

அதிகரித்துள்ள பயணங்கள் மற்றும் டெல்டா திரிபு பரவல் என்பன தற்போதைய நிலைக்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் இந்தோனேசியாவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2.3 மில்லியன் பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதுடன், 60 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.