கொரோனா 3 – தடுப்பூசி விரைவில்!

பைடனின்
பைடனின்

அமெரிக்கா்களுக்கு வரும் மாதங்களில் 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி தேவைப்படும் என ஜனாதிபதி பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகரும் தொற்றுநோய் நிபுணருமான ஆண்டன் ஃபெளச்சி தெரிவித்துள்ளாா்.

தடுப்பூசி தயாரிப்பு நிபுணரான ஃபைசா், கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை தொடா்ந்து 12 மாதங்களில் கூடுதலாக ஒரு டோஸ் போடப்பட வேண்டும் எனவும், அற்கு அங்கீகாரம் கோரியும் அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், இந்த நேரத்தில் கூடுதல் டோஸ் தடுப்பூசி தேவை அவசியம் எனக் கருதவில்லை என்று கூறி ஃபைசரின் விண்ணப்பத்தை நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், உணவு மற்றும் மருந்து நிா்வாகத் துறைகள் நிராகரித்தன.

இந்நிலையில், ஆண்டனி ஃபெளச்சி தெரிவித்திருப்பது: இப்போது நம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான தரவுகள் கிடைக்கும்போது, வயது மற்றும் உடல்நிலையைப் பொருத்து மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசு வலியுறுத்தலாம் என்றாா் அவா்.

அமெரிக்காவில் 48 சதவீதம் போ் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். நாட்டின் சில பகுதிகளில் நோய்த் தடுப்பு விகிதம் குறைவாக உள்ளது. அங்கு டெல்டா வகை கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.