இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

202106270221379439 Corona damage to 1049 police SECVPF
202106270221379439 Corona damage to 1049 police SECVPF

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்ற நிலையில், நேற்று (12) ஒரேநாளில் 30 ஆயிரத்து 827 தொற்றாளர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 9 இலட்சத்து 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 56 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 4 இலட்சத்து 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.