தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 204 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, மலேசியாவில் உள்ள தடுப்பூசி ஏற்றல் மையம் ஒன்றை மூட இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கோலாலம்பூருக்கு வெளியே உள்ள தடுப்பூசி ஏற்றல் மையம் ஒன்றை இவ்வாறு மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மலேசிய விஞ்ஞானத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
நாளொன்றில் சுமார் மூவாயிரம் பேருக்கு தடுப்பூசி ஏற்றும் குறித்த மையத்தில் பணியாற்றும், தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 453 பேரில் 204 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதையடுத்து, தொற்று நீக்கும் பணிகளுக்காக மூடப்பட்டுள்ள குறித்த மையத்தை, புதிய பணியாளர்களுடன் நாளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.