சீனாவில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலி!

download 7
download 7

கிழக்கு சீனாவின் சியூஸோ (Suzhou) நகரில் உள்ள விருந்தகக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 17 பேர் பலியாகினர்.

அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் குறித்த விருந்தகக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததன் பின்னர், சுமார் 36 மணிநேரம் மேற்கொண்ட மீட்புப் பணிகளில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மூன்று மாடிகளைக் கொண்ட குறித்த கட்டடத்தில், அண்மையில் மேலும் சில மாடிகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.